18.
பிள்ளை பெற்றார்தமைப் பார்த்து...
அள்ளித் தெள் நீறு அணியும் தண்டலையார்
வளநாட்டில்
ஆண்மை உள்ளோர்,
விள் உற்ற கல்வி உள்ளோர், செல்வம் உள்ளோர்,
அழகு
உடையோர் மேன்மை நோக்கி
உள்ளத்தில் அழன்று அழன்று நமக் கு இல்லை
என
உரைத்து இங் கு உழல்வார் எல்லாம்
பிள்ளை பெற்றவர் தமைப் பார்த்து இருந்து
பெருமூச்சு
எறியும் பெற்றியாரே. |
|