19.
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்
மண்
உலகு ஆளவும் நினைப்பார், பிறர்பொருள்மேல்
ஆசை
வைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்
அலக்கு
அழிந்து புரண்டே போவார்;
பண் உலவு மொழிபாகர் தண்டலையார்
வகுத்த
விதிப்படி அல்லாமல்
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே
மெய்
ஆகும் இயற்கை தானே! |
|