22.
தன்பாவம் தன்னோடு
செங்காவி
மலர்த்தடம் சூழ் தண்டலைநீள்
நெறியே!
நின் செயல் உண்டாகில்
எங்காகில் என்ன? அவர் எண்ணியது எல்லாம்
முடியும்!
இல்லை யாகில்,
பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்
வெள்
எலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
தன்னுடனே
ஆகும் தானே. |
|