30.
‘தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்'
மான் ஒன்று வடிவு எடுத்து மாரீசன்
போய்மடிந்தான்!
மானே என்று
தேன் என்று மொழிபேசிச் சீதைதனைச்
சிறை
இருக்கத் திருடிச் சென்றோன்
வான் ஒன்றும் அரசு இழந்தான்! தண்டலையார்
திரு
உளத்தின் மகிமை காணீர்!
தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று
நினைப்பதுவும்
சகசம் தானே. |
|