31.
பொய் சொல்லி வாழ்வது இல்லை
கைசொல்லும்
பனைகாட்டும் களிற்று உரியார்
தண்டலையைக்
காணார் போலப்
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
கிடையாது!
பொருள் நில்லாது!
மைசொல்லும் காரி அளிசூழ் தாழைமலர்
பொய்சொல்லி
வாழ்ந்தது உண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
வாழ்வது
இல்லை! மெய்ம்மை தானே! |
|