35.  துறவிக்கு வேந்தன் துரும்பு

சிறுபிறை துன்னிய சடையார் தண்டலைசூழ்
   பொன்னி வளம் செழித்த நாட்டில்,
குறைஅகலும் பெருவாழ்வும் மனைவியும்
   மக்களும் பொருளாக் குறித்திடாமல்,
மறை பயில் பத்திரகிரியும் பட்டினத்துப்
   பிள்ளையும் சேர் மகிமையாலே,
துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
   வேந்தன் ஒரு துரும்பு தானே.
உரை