37.  மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்.

இரந்தனை இத்தனை நாளும் பரந்தனை நான்
   என்று அலைந்தாய்! இனிமேலேனும்
கரந்தை மதி சடை அணியும் தண்டலைநீள்
   நெறியாரே காப்பார் என்னும்
உரம்தனை வைத்து இருந்தபடி இருந்தனையேல்1
   உள்ள எலாம் உண்டாம்! உண்மை!
மரம்தனை வைத்தவர் நாளும் வாடாமல்
   தண்ணீரும் வார்ப்பர் தாமே.
உரை