38.  செங்கோல் அரசனே தெய்வம்

நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
   வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்
   புவி ஆளும் வண்மை செய்த
தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் :
   கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கம் உள்ள அரசனும்தன் மந்திரியும்
   ஆழ்நரகில் மூழ்குவாரே!
உரை