39.  காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு!

ஓது அரிய வித்தை வந்தால் உரிய சபைக்கு
   அழகு ஆகும்; உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவு வந்தால் இனிய குணங்
   களுக்கு அழகாய் இருக்கும் அன்றோ?
நீதிபெறு தண்டலையார் திருநீறு
   மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும்;
காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே
   அழகு ஆகிக் காணும் தானே.
உரை