40.
கவி சொல்லார்!
‘பாரதியார்'
‘அண்ணாவி' ‘புலவர்' என்பார்
கல்வியினில்
பழக்கம் இல்லார்!
சீர் அறியார் தளை அறியார் பல்லக்கு
ஏறுவர்!
புலமை செலுத்திக் கொள்வார்!
ஆர் அணியும் தண்டலைநீள் நெறியாரே!
இலக்கண
நூல் அறியாரேனும்
காரிகையாகிலும் கற்றுக் கவி சொல்லார்
பேரி
கொட்டக் கடவர் தாமே.
|