46.   பூனை பிடித்தது விடுமோ?

பொலிய வளம் பல தழைத்த தண்டலைநீள்
   நெறி பாதம் போற்றி நாளும்
வலிய வலம் செய்து அறியீர்? மறம் செய்வீர்!
   நமன் தூதர் வந்து கூடி
மெலிய வரைந்திடுபொழுது கலக் கண்ணீர்
   உகுத்தாலும் விடுவது உண்டோ?
எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது
   விடுமோ? என்செய் வீரே?

உரை