50.   எய்தவர் இருக்க அம்பை நோவதேன்?

வைதிடினும் வாழ்த்திடினும் இன்ப துன்பம்
   வந்திடினும் வம்பு கோடி
செய்திடினும் தண்டலை நீள் நெறியார்தம்
   செயல் என்றே தெளிவது அல்லால்
மெய் தவிர அவர் செய்தார் இவர் செய்தார்
   என நாடி வெறுக்க லாமோ!
எய்தவர்தம் அருகு இருக்க அம்பை நொந்த
   கருமம் என்ன? இயம்புவீரே!

உரை