63.   முழுப் பூசணிக்காய் மறைத்தல்

தத்தை மொழி உமை சேரும் தண்டலையார்
   பொன்னி வளம் தழைத்த நாட்டில்
வித்தக மந்திரி இல்லாச் சபைதனிலே
   நீதி இல்லை! வேந்தர்க்கு எல்லாம்
புத்தி நெறி நீதி சொல்லு மந்திரி அல்லாது
   ஒருவர் போதிப்பாரோ!
நித்தலும் உண் சோற்றில் முழுப் பூசணிக்காய்
   மறைத்ததுவும் நிசம் அது ஆமே!

உரை