65.   தன்வினை தன்னைச் சுடும்

மண் உலகில் பிறர் குடியை வஞ்சனையில்
   கெடுப்பதற்கு மனத்தினாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே
   கெடுவன் என்பது உண்மை அன்றோ?
தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீள்
   நெறியாரே! தெரிந்து செய்யும்
தன்வினை தன்னைச் சுட ஓட்டு அப்பம் வீட்டைச்
   சுடவும் தான் கண்டோமே.

உரை