66.  தாயைப் பழித்து மகள் .....

முன் பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி
   தனைப் பழித்து, முரணே பேசிப்
பின் பலரை உடன்கூட்டி நூதனமா
   நடத்துவது பிழைபாடு எய்தில்
துன்பு அறியாக் கதி அருளும் தண்டலைநீள்
   நெறியாரே! தூயள் ஆகி
அன்புள தாயைப் பழித்து மகள்ஏதோ
   செயத் தொடங்கும் அறிவு தானே.

உரை