68.   ஏழைக்குத் தெய்வமே துணை

அந்தணர்க்குத் துணை வேதம், அரசருக்குத்
   துணை வயவாள், அவனி மீது
மைந்தர்க்குத் துணை தாயார், தூதருக்குத்
   துணை, மதுர வார்த்தை அன்றோ?
நந்தமக்குத் துணையான தண்டலைநீள்
   நெறியாரே நண்பர் ஆன
சுந்தரர்க்குத் துணை, நாளும் ஏழையர்க்குத்
   தெய்வமே துணை என்பாரே.

உரை