70. ஒழியாதவை உபசாரம் செய்பவரை விலக்கிடினும் அவர் செய்கை ஒழிந்து போகா தபசாரம் செய்வாரை அடித்தாலும் வைதாலும் அது நில்லாது! சுபசாரத் தண்டலையார் வள நாட்டில் திருடருக்குத் தொழில் நில்லாது! விபசாரம் செய்வாரை மேனி எல்லாம் சுட்டாலும் விட்டிடாரே.