73.    பனங்காட்டு நரி சலசலப்புக்கு .....

புனம் காட்டும் மண்ணும் விண்ணும் அஞ்ச வரும்
   காலனையும் போடா என்றே
இனம் காட்டும் மார்க்கண்டன் கடிந்து பதினாறு
   வயது என்றும் பெற்றான்
அனம் காட்டும் தண்டலையார் அடியார் எல்லாம்
   ஒருவர்க்கு அஞ்சுவாரோ!
பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு
   ஒருநாளும் பயப்படாதே.

உரை