75.  சுகம் படுக்கை அறியாது

தான் அவன் ஆகிய ஞானச் செயல் உடையார்
   மாதர் முலை தழுவினாலும்
ஆன தொழில் வகை வகையாச் செய்தாலும்
   அனுபோகம் அவர்பால் உண்டோ?
கான உறையும் தண்டலையார் அடிபோற்றும்
   சுந்தரனார் காமி போலாய்
மேல் நவிலும் சுகம் படுக்கை மெத்தை அறியாது
   எனவே விளம்பினாரே.

உரை