77.    பித்தருக்குத் தம் குணமே ...

எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும்
   மூடருக்கும் இரக்கம் பாரா
மத்தருக்கும் கொடிதாம் அவ் அக்குணமே
   நற்குணமா வாழ்ந்து போவார்!
பத்தருக்கு நலம் காட்டும் தண்டலையாரே
   அறிவார்! பழிப்பாரேனும்
பித்தருக்குத் தம் குணமே நூலினும்
   செம்மையது ஆன பெற்றி ஆமே.

உரை