78.   அன்ன நடை நடக்கப் போய் ...

பன்னக வேணிப் பரமர் தண்டலையார்
   நாட்டில் உள பலரும் கேளீர்!
தன் அறிவு தன் நினைவு தன்மகிமைக்கு
   ஏற்ற நடை தகுமே அல்லால்,
சின்னவரும் பெரியவர் போலே நடந்தால்
   உள்ளது போம்! சிறிய காகம்
அன்ன நடை நடக்கப்போய்த் தன் நடையும்
   கெட்ட வகை ஆகும் தானே.

உரை