9.
விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து
திரு
இருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை
செலுத்தும் நல்லோர்
ஒரு விருந்தாயினும் இன்றி உண்ட பகல்
பகலாமோ?
உறவாய் வந்த
பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி
இன்னும்
எங்கே பெரியோர் என்று
வரு விருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது
உணும்
சோறு மருந்து தானே. |
|