91. மலைமீதில்
இருப்பவரைப் பன்றி பாயாது
நிலைசேரும் அதிக விதரண சுமுக
துரைகளுடன் நேசம் ஆகிப்
பலநாளுமே அவரை அடுத்தவர்க்குப்
பலன் உண்டாம்! பயமும் இல்லை!
கலைசேரும் திங்கள்அணி தண்டலையாரே!
சொன்னேன்! கண்ணில் காண
மலைமீதில் இருப்பவரை வந்து பன்றி
பாய்வது எந்த வண்ணம் தானே?
|