96. இளைத்தவன்
பெண்டிர் என்றால் .....
களித்து வரும் செல்வருக்கு வலிமை உண்டு!
மிடியருக்குக் கனம் தான் உண்டோ?
வளைத்த மலை எனும் சிலையார் தண்டலைசூழ்
தரும் உலக வழக்கம் பாரீர்!
ஒளித்திடுவம் தம்மனையில் பெண்டீரைக்
கண்டவரும் ஒன்றும் பேசார்!
இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லார்க்கும்
மச்சினியாய் இயம்புவாரே.
|