10.
சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி
பொன்
குடையும் பொன் துகிலும் பொன் பணியும்
கொடுப்பது
என்ன பொருளோ? என்று
நன் கமல முகம் மலர்ந்தே உபசாரம்
மிக்க
இன்சொல் நடத்தல் நன்றே;
கல் கரையும் மொழிபாகர் தண்டலையார்
வளநாட்டில்
கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
பொழிந்துவிடும்
தன்மை தானே! |
|