6. குங்குமம்
சுமந்த கழுதை
பேர் உரை கண்டு அறியாது
தலைச்சுமை
ஏடுகள் சுமந்து பிதற்றுவோனும்,
போரில் நடந்து அறியாது பதினெட்டு
ஆயுதம் சுமந்த புல்லியோனும்
ஆர் அணி தண்டலைநாதர் அகமகிழாப்
பொருள் சுமந்த அறிவிலோனும்
காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த
கழுதைக்கு ஒப்பு ஆவர் தாமே.
|