10. ஒன்று
இல்லாமல் பயன்படாதவை
கோவில்
இல்லாத ஊர், நாசி இல்லா முகம்,
கொழுநன் இல்லாத மடவார்,
குணமது இல்லா வித்தை, மணமது இல்லாத மலர்,
குஞ்சரம் இலாத சேனை,
காவல் இல்லாத பயிர், பாலர் இல்லாத மனை,
கதிர் மதி இலாத வானம்,
கவிஞர் இல்லாத சபை, சுதி லயை இலாத பண்,
காவலர் இலாத தேசம்,
ஈவது இல்லாத தனம் நியமம் இல்லாத செபம்,
இசை லவணம் இல்லாத ஊண்,
இச்சை இல்லாத பெண் போக நலம், இவை தம்மின்
ஏது பலன் உண்டு? கண்டாய்!
ஆவி அனையாட்கு இடம் தந்தவா! கற்ப தரு
ஆகும் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|