15. செயற்கு
அருஞ் செயல்
நீர் மேல் நடக்கலாம்!
எட்டியும் தின்னலாம்!
நெருப்பை நீர் போல் செய்யலாம்!
நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!
நீள் அரவினைப் பூணலாம்!
பார் மீது மணலைச் சமைக்கலாம் சோறு எனப்
பட்சமுடனே உண்ணலாம்!
பாணமொடு குண்டு விலகச் செய்யலாம்! மரப்
பாவை பேசப் பண்ணலாம்!
ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
எடுக்கலாம்! புத்தி சற்றும்
இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
எவருக்கும் முடியாது காண்!
ஆர்மேவு கொன்றை புனை வேணியா! சுரர்பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|