30. குணத்தைவிட்டுக்
குற்றத்தை ஏற்றல்
துட்ட
விகடக் கவியை யாருமே மெச்சுவர்;
சொல்லும் நற் கவியை மெச்சார்
துர்ச்சனர்க்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் வரும்
தூயரைத் தள்ளி விடுவார்
இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார்; கறுப்பு
என்னிலோ போய்ப் பணிகுவார்;
ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார்; வேசை
என்னிலோ காலில் வீழ்வார்;
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
நன்றாகவே பேசிடார்;
நாளும் ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு
நன்மை பலவே செய்குவார்;
அட்டதிசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை காண்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|