32.
கூடின் பயன்படல்
செத்தை பல
கூடி ஒரு கயிறாயின் அது கொண்டு
திண்கரியையும் கட்டலாம்!
திகழ்ந்த பல துளி கூடி ஆறாயின் வாவியொடு
திரள்ஏறி நிறைவிக்கலாம்!
ஒத்த நுண்பஞ்சு பல சேர்ந்து நூல் ஆயிடின்
உடுத்திடும் கலை ஆக்கலாம்!
ஓங்கி வரு கோலுடன் சீலையும் கூடினால்
உயர் கவிகை ஆ கொள்ளலாம்!
மற்றும் உயர் தண்டுலத்தோடு தவிடு உமி கூடின்
பல்கும் முளை விளைவிக்கலாம்!
மனமொத்த நேயமொடு கூடி ஒருவர்க்கு ஒருவர்
வாழின் வெகு வெற்றி பெறலாம்!
அற்ற கனியைப் பொருத்து அரி பிரமர் தேடரிய
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|