44.
நன்று தீதுஆதல்
வான் மதியை
நோக்கிடின் சோரர் காமுகருக்கு
மாறாத வல்விடம் அதாம்!
மகிழ்நன் தனைக் காணில் இதம் இலா விபசரிய
மாதருக்கு ஓவிடம் அதாம்!
மேன்மை தரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
மிக்க பேர்க்கு அதிக விடமாம்!
வித்தியா அதிபர்தமைக் கண்ட போது அதிலோப
வீணர்க்கு எலாம் விடம் அதாம்!
ஈனம் மிகு புன்கவி வலோர்க்கு அதிக சபை காணில்
ஏலாத கொடிய விடமாம்!
ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில்
எந்நாளும் அதிக விடமாம்!
ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|