68. விருந்து
வாரம்
செங்கதிர்க்கு
உறவு போம், பகை வரும், விருந்து ஒருவர்
செய்ய ஒணாது உண்ண ஒணாது;
திங்களுக்கு உறவு உண்டு; நன்மையாம்; பகைவரும்
செவ்வாய் விருந்து அருந்தார்;
பொங்கு புதன் நன்மை உண்டு உறவாம்; விருந்து உணப்
பொன்னவற்கு அதிக பகை ஆம்;
புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப்
போன உறவும் திரும்பும்;
மங்குல் நிகர் சனி வாரம் நல்லதாம்; இதனினும்
மனம் ஒத்து இருந்த இடமே
வாலாயமாய்ப் போய் விருந்து உண விருந்து உதவ
வாய்த்த நாள் என்று அறியலாம்;
அம்கையில் விளங்கி வளர்துங்கம் மழுவாளனே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|