86.
அரசவைக் கணக்கர்
வரும் ஓலை உத்தரத்து
எழுதி வரு பொருளினால்
வரவிடுப்போன் மனதையும்,
மருவி வரு கருமமும் தேச காலத்தையும்
வரு கரதல ஆமலகமாய்
விரைவாய் அறிந்து அரசர் எண்ணில் எண்ணினை
அளவிட எழுத வாசிக்கவும்
வெற்றி கொண்டே பெரிய புத்தி உடையோன் புவியின்
மேன்மை ராயசகாரன் ஆம்;
கருவாய் அறிந்து தொகை ஈர் ஆறு நொடியினில்
கடிது ஏற்றிடக்கு உறைக்கக்
கடுகை ஒரு மலையாக மலையை ஒரு கடுகுமாக
காட்டுவோன் கருணீகன் ஆம்;
அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|