87.
சீற்றத்தின் கொடுமை
கோபமே பாவங்களுக்கு
எல்லாம் தாய் தந்தை!
கோபமே குடி கெடுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது!
கோபமே துயர் கொடுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவு அறுக்கும்!
கோபமே பழி செயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவனாக்கும்!
கோபமே மறலி முன் கொண்டுபோய்த் தீய நரகக்
குழியினில் தள்ளும் ஆல்!
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|