9. ஒன்றற்கு
ஒன்று அழகு
வாழ்மனை
தனக்கு அழகு குலமங்கை; குலமங்கை
வாழவினுக்கு அழகு சிறுவர்;
வளர்சிறுவருக்கு அழகு கல்வி;கல்விக்கு அழகு
மாநிலம் துதிசெய் குணமாம்;
சூழ்குணம் அதற்கு அழகு பேரறிவு; பேரறிவு
தோன்றிடில் அதற்கு அழகுதான்
தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை
சொல்அரிய பெரியோர்களைத்
தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை
சாற்றும் இவை அழகு என்பர் காண்
சௌரி, மலரோன், அமரர், முனிவர், முச்சுடர் எலாம்
சரணம் எமை ரட்சி எனவே.
ஆழ்கடல் உதித்துவரு விடம் உண்ட கண்டனே!
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|