91. காமன்
துணைப் பொருள்கள்
வெஞ்சிலை
செழும் கழை; வில்நாரி கரு வண்டினம்;
மேல் விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல் தேர்; பைங்கிள்ளையே பரிகள்;
வேழம் கெடாத இருள் ஆம்;
வஞ்சியர் பெரும் சேனை; கைதை உடைவாள்; நெடிய
வண்மை பெறு கடல் முரசம் ஆம்;
மகரம் பதாகை; வரு கோகிலம் காகளம்;
மனதே பெரும் போர்க்களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுத நேயன் கவிகை;
சார்இரதியே மனைவி ஆம்;
தறுகண் மடமாதர் இளமுலை மகுடம் ஆம்; அல்குல்
தவறாது இருக்கும் இடம் ஆம்;
அஞ்சுகணை மார வேள்கு என்பர்; எளியோர்க்கு எலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|