92. பகை
கொள்ளத் தகாதவர்
மன்னவர்,
அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு
மாறாத மர்மம் உடையோர்,
வலுவர், கருணீகர், மிகு பாகம் செய்து அன்னம் இடும்
மடையர், மந்திரவாதியர்,
சொன்னம் உடையோர் புலையர், உபதேசம் அது செய்வோர்
சூழ்வயித்தியர், கவிதைகள்
சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்
சொப்பனந் தனில் ஆகிலும்
நன்னெறி அறிந்த பேர் பகை செய்திடார்கள் இந்
நானிலத்து என்பர் கண்டாய்!
நாரியோர் பாகனே! வேத ஆகமம் பரவும்
நம்பனே! அன்பர் நிதியே!
அன்னம் ஊர் பிரமனும் கண்ணனும் காணாத
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|