நேரிசை வெண்பா உம்பர்கோன் எம்பெருமான் ஓங்கு அறப்பளீசுரன்மேல் பைம்பொருள் சேரும் சதகம் பாடவே - அம்புவியோர் ஆக்கும் துதிக்கையான் அன்புடையார்க்கு இன்பு அருளிக் காக்கும் துதிக்கையான் காப்பு.