அவையடக்கம்
இரட்டை ஆசிரிய
விருத்தம்
மாரிக்கு நிகர்என்று
பனிசொரிதல் போலவும்,
மனைக்குநிகர் என்றுசிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும், சந்த்ரன்முன்
மருவு மின்மினி போலவும்,
பாருக்குள் நல்லோர்
முனே பித்தர் பலமொழி
பகர்ந்திடும் செயல்போலவும்,
பச்சைமயில் ஆடுதற்கு இணைஎன்று வான்கோழி
பாரில் ஆடுதல் போலவும்,
பூரிக்கும் இனிய காவேரிக்கு
நிகர்என்று
போது வாய்க்கால்போலவும்,
புகல்சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
பொருந்த வைத்தது போலவும்,
வாரிக்கு முன்வாவி
பெருகல்போலவு இன்சொல்
வாணர்முன் உகந்துபுல்லை
வாலகுமரேசர் மேல்சதகம் புகன்றனன்
மனம்பொறுத்து அருள்புரியவே.
|