13. இவர்க்கு இது துரும்பு எனல்

தாராளமாகக் கொடுக்கும் தியாகிகள்
     தமக்கு நல்பொருள் துரும்பு,
  தன்உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி
     தளம்எலாம் ஒருதுரும்பு,
பேரான பெரியருக்கு அற்பரது கையினில்
     பிரயோசனம் துரும்பு,
  பெரிதான மோட்சசிந்தனை உள்ளவர்க்குஎலாம்
     பெண்போகம் ஒருதுரும்பு,
தீராத சகலமும் வெறுத்த துறவிக்குவிறல்
     சேர்வேந்தன் ஒருதுரும்பு,
  செய்யகலை நாமகள் கடாட்சம் உள்ளோர்க்குஎலாம்
     செந்தமிழ்க் கவிதுரும்பாம்.
வார்ஆரும் மணிகொள் முலைவள்ளி தெய் வானையை
     மணம்புணரும் வடிவேலவா
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை