15. பிறப்பினால் மட்டும் நன்மைஇல்லை

சிங்கார வனமதில் உதிப்பினும் காகம்அது
     தீம்சொல்புகல் குயில்ஆகுமோ ?
  திரைஎறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி
     செம்கஞ்ச மலர்ஆகுமோ?
அம்கானகத்தில் பிறந்தாலும் முயல்ஆனது
     ஆனையின் கன்றுஆகுமோ?
  ஆண்மைஆகிய நல்ல குடியில் பிறந்தாலும்
     அசடர்பெரியோர் ஆவரோ?
சங்குஆடு பால்கடல் பிறந்தாலும் நத்தைதான்
     சாலக்கிராமம் ஆமோ?
  தடம்மேவு கடல்நீரிலே உப்பு விளையினும்
     சாரசர்க்கரை ஆகுமோ?
மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம்
     வைத்த மெய்ஞ்ஞானகுருவே
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை