16. பலருக்கும் பயன்படுவன

கொண்டல்பொழி மாரியும், உதாரசற்குணம்உடைய
     கோவும் ஊருணியின் நீரும்
  கூட்டம்இடும் அம்பலத்து உறுதருவின் நீழலும்,
     குடியாளர் விவசாயமும்,
கண்டவர்கள் எல்லாம் வரும்பெரும் சந்தியில்
     கனிபல பழுத்தமரமும்,
  கருணையுடனே வைத்திடும் தண்ணீர்ப் பந்தலும்
     காவேரி போல்ஊற்றமும்,
விண்தலத்துஉறைசந்திர ஆதித்த கிரணமும்,
     வீசும்மாருத சீதமும்,
  விவேகிஎனும் நல்லோர் இடத்தில் உறுசெல்வமும்
     வெகுசனர்க்கு உபகாரமாம்,
வண்டுஇமிர் கடப்பமலர் மாலைஅணி செங்களப
     மார்பனே வடிவேலவா
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை