17. தாம் அழியினும் தம் குணம் அழியாதவை

தங்கம்ஆனது தழலில் நின்றுஉருகி மறுகினும்
     தன்ஒளி மழுங்கிடாது,
  சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே
     தன்மணம் குன்றிடாது,
பொங்கமிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே
     பொலிவெண்மை குறைவுஉறாது,
  போதவே காய்ந்துநன் பால்குறுகினாலும்
     பொருந்துசுவை போய்விடாது,
துங்கமணி சாணையில் தேய்ந்துவிட்டாலும்
     துலங்குகுணம் ஒழியாது,பின்
  தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
     தூயநிறை தவறுஆகுமோ
மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை
     மருவு திண்புயவாசனே
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை