18. நரகில்
வீழ்வோர் இன்னவர் எனல்
மன்னரைச் சமரில்விட்டு
ஓடினவர், குருமொழி
மறந்தவர், கொலைப்பாதகர்
மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம்
மருவித் திரிந்தபேர்கள்
அன்னம் கொடுத்தபேருக்குஅழிவை எண்ணினோர்
அரசுஅடக்கிய அமைச்சர்
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர்
அருந்தவர் தமைப்பழித்தோர்
முன் உதவியாய்ச் செய்த நன்றியை மறந்தவர்
முகத்துதி வழக்குஉரைப்போர்
முற்று சிவபத்தரை நடுங்கச் சினந்தவர்கள்
முழுதும் பொய்உரைசொல்லுவோர்
மன்ஒருவர் வைத்தபொருள் அபகரித்தோர் இவர்கள்
மாநரகில் வீழ்வர் அன்றோ?
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே.
|