19. உடல்நலத்துக்கு
ஏது ஆனவை.
மாதத்து இரண்டுவிசை
மாதரைப் புல்குவது,
மறுவுஅறு விரோசனம்தான்
வருடத்து இரண்டுவிசை; தைலம் தலைக்குஇடுதல்
வாரத்து இரண்டு விசையாம்
மூதறிவினொடுதனது வயதினுக்கு இளையஒரு
மொய்குழலுடன் சையோகம்
முற்றுதயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
முதிரா வழுக்கைஇளநீர்
சாதத்தில் எவ்வளவு ஆனாலும் புசித்தபின்
தாகம் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல், இவை மேலவர்
சரீரசுகம்ஆம் என்பர்காண்
மாதவகுமாரி சாரங்கத்து, உதித்தகுற
வள்ளிக்கு உகந்த சரசா
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|