20. யாருக்கும்
அனுபோகம் விடானும்
தேசுபெறு மேரும் ப்ரதட்சணம்
செய்து மதி
தேகவடு நீங்கவில்லை
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன்
செறும்பகை ஒழிந்தது இல்லை
ஈசன் கழுத்தில்உறு பாம்பினுக்கு இரைவேறு
இலாமலே வாயுவாகும்
இனியகண் ஆகிவரு பரிதிஆனவனுக்கு
இராகுவோ கனவிரோதி
ஆசிலாப் பெரியோர் இடத்தினில் அடுக்கினும்
அமைத்தபடி அன்றிவருமோ?
அவர்அவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும்
அல்லால் வெறுப்பதுஎவரை
வாசவனும் உம்பர் அனைவரும் விசயசயஎன்று
வந்துதொழுது ஏத்துசரணா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|