21. இது இன்றி இது சிறவாது

குருஇலா வித்தை;கூர்அறிவுஇலா வாணிபம்
     குணமிலா மனைவி ஆசை
  குடிநலம் இலாநாடு நீதிஇல்லாஅரசு
     குஞ்சரம்இலாத வெம்போர்
திருஇலா மெய்த்திறமை பொறைஇலா மாதவம்
     தியானம்இல்லாத நிட்டை
  தீபம்இல்லாதமனை சோதரம்இலாதஉடல்
     சேகரம்இலாத சென்னி
உருஇலா மெய்வளமை; பசிஇலா உண்டி புகல்
     உண்மைஇல்லாத வசனம்
  யோசனைஇலா மந்திரி தைரியம் இலாவீரம்
     உதவிஇல்லாத நட்பு
மருஇலா வண்ணமலர் பெரியோர் இலாதசபை
     வையத்து இருந்துஎன்பயன்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை