22. ஆகாப்பகை
அரசர்பகையும்,தவம்புரி
தபோதனர் பகையும்
அரியகருணீகர் பகையும்
அடுத்துக் கெடுப்போர் கொடும்பகையும் உள்பகையும்
அருள்இலாக் கொலைஞர்பகையும்
விரகுமிகும் ஊரில்உள்ளோருடன் பகையும் மிகு
விகடப்ரசங்கி பகையும்
வெகுசனப் பகையும் மந்திரவாதியின் பகையும்
விழைமருத்துவர்கள் பகையும்
உரமருவு கவிவாணர் பகையும் ஆசான்பகையும்
உறவின்முறையார்கள் பகையும்
உற்றதிரவியம் உளோர் பகையும் மந்திரிபகையும்
ஒருசிறிதும் ஆகாதுகாண்
வரநதியின் மதலைஎன இனியசரவணமிசையில்
வருதருண சிறுகுழவியே
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|