24. அந்த அந்த இனத்தில் உயர்ந்தவை

தாருவில் சந்தனம், நதியினில் கங்கை,விர
     தத்தினில் சோமவாரம்
  தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்
     தலத்தினில் சிதம்பர தலம்
சீர்உலவு ரிஷிகளில் வசிட்டர்,பசுவில் காம
     தேனு முனிவரில் நாரதன்
  செல்வநவமணிகளில் திகழ்பதுமராகமணி
     தேமலரில் அம்போருகம்
பேர்உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு
     பெலத்தில் மாருதம்,யானையில்
  பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம்
     பிரணவம் மந்திரத்தில்
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில்
     மாமேரு ஆகும் அன்றோ ?
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை