25. அவதவர்க்கு வலிமை
அந்தணர்க்கு உயர்வேதமே
பலம், கொற்றவர்க்கு
அரிய சௌரியமே பலம்
ஆனவணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்கு
ஆயின் ஏர்உழவேபலம்
மந்திரிக்குச் சதுர்உபாயமே பலம் நீதி
மானுக்கு நடுவேபலம்
மாதவர்க்குத் தவசுபலம் மடவியர்க்குநிறை,
மானம்மிகு கற்பேபலம்
தந்திரம் மிகுத்த கனசேவகர் தமக்குஎலாம்
சாமிகாரியமே பலம்
சான்றவர்க்குப் பொறுமையேபலம் புலவோர்
தமக்குநிறை கல்விபலமாம்
வந்தனை செயும்பூசை செய்பவர்க்கு இன்புபலம்
வாலவடிவான வேலா
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|